maniyosai.com

You are here: Home செய்திகள் வணிக செய்திகள் சென்னையில் கடைகள் 'சீல்'வைப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் விசாரணை!

சென்னையில் கடைகள் 'சீல்'வைப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் விசாரணை!

Share/Save/Bookmark

Renganathan Street T.Nagarசென்னை: கடந்த அக்டோபர் 31 அன்று சென்னை தி.நகர், ரெங்கநாதன் தெருவில் இயங்கிவந்த பல கடைகளை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டன. அதனை எதிர்த்து வணிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தது. அந்த மனு இன்று (நவ.11) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையால் தி.நகர் ரெங்கநாதன் சாலையில் பல கடைகள் சீல் வைக்கப்பட்டன. அதன் விளைவால் ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குரல் கொடுத்து சென்னையில் அந்தப் பகுதியில் 2500-க்கும் மேலான கடைகள் நேற்று (நவ.10) ஒரு நாள் மூடப்பட்டன.

இது குறித்து வணிகர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஏ.எம்..விக்கிரம ராஜா கூறியதாவது:

"கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருப்பில் கொண்டுள்ள கடைகள் சீல் வைக்கப்பட்டுவிட்டன. அவற்றில் ஏராளமான அழுகக்கூடிய பொருட்கள்கூட இருந்தன. ஆயிரக்கணக்கான பேர்கள் வேலை இழந்துள்ளனர். இன்னும் பல கடைகள் மாநகராட்சியினரால் மூடப்படவுள்ளன. இந்நிலையில் இது எங்கள் முதல்கட்ட எதிர்ப்பு நடவடிக்க ஆகும். அடுத்தவாரம் 400-க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுக்கவுள்ளனர்." இவ்வாறு ராஜா குறிப்பிட்டுள்ளார்.

வணிகர்கள் சங்க கூட்டமைப்பினரால் விடுக்கப்பட்ட கடையடைப்பு அழைப்பினைத் தொடர்ந்து, நேற்று தி.நகர் ரெங்கநாதன் தெரு கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது!

சென்னை மாநகராட்சி முன்னதாக, பெரிய வணிக வளாகங்கள் உட்பட 19 இடங்களை சீல் வைத்துள்ளது. அவற்றில் பல நகைக்கடைகளும், துணிக்கடைகளும் அடங்கும். அவை மாநகராட்சியின் அனுமதியின்றி விஸ்தரிக்கப்பட்டவை என்பதே குற்றச்சாட்டாகும்.அனுமதியின்றி  கார் நிறுத்தும் இடங்கள் அமைத்தல், மூன்றாவது, நான்காவது ஐந்தாவது தளங்கள் அமைத்தல் போன்ற குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கைகளை "வெறும் கண்துடைப்பு நாடகம்" என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் கடந்த அக்டோபர் 12 அன்று ஒவ்வொரு அனுமதிமீறல் நடவடிக்கையிலும் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தின் முந்தைய அறிவுரைகள் செயல்படுத்தப் பட்டுள்ளனவா என அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 18.36 தலைப்புச் செய்திகள்
தி.நகர் கடைகளை 6 வாரங்களுக்கு திறக்கலாம் - உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
புதுதில்லி: சென்னை தி.நகரில் முத்திரையிடப் பட்ட கடைகளை 6 வாரக்...மேலும்...
0 Comments , 134 Hits
19 January 2012, 19.35 தலைப்புச் செய்திகள்
விதிமுறைகள் மீறி கட்டப் படும் கட்டங்களுக்கு பொறியாளர்களே பொறுப்பு : மேயர் துரைசாமி
சென்னை: இனி விதிமுறைகள் மீறி கட்டப் படும் கட்டடங்களுக்கு அதனைக்...மேலும்...
0 Comments , 78 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%