புதுதில்லி: புகழ்பெற்ற தொலைதொடர்பு நிறுவனமான வோடாஃபோன் புதியவகை ஆன்ட்ராய்டு வசதிகொண்ட 3ஜி மொபைல் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் "வோடாஃபோன் ஸ்மார்ட்"
வோடாபோன் ஸ்மார்ட் புதியவகை கைப்பேசியானது புதிய தொழிநுட்பம் விரும்பும் வாடிக்கையாளர்கள் பல மொபைல் அப்ப்ஸ் களை பயன்படுத்தும் வகையிலும், விளையாட்டுகள், வலைத்தொடர்புகள், சமூக நட்பு இணையதளங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொள்ளும் வகையிலும் க்வால்கம்ஸ் ஸ்நாப்ட்ராகன் எஸ் 1 செயல்பாட்டாலும், ஆன்ட்ராய்டாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்ஃபோனின் விலை ரூ.4995/ ஆக இருக்கும். இது நிச்சயம் இளைஞர்கள் விரும்பும் வகையில் பல புதிய அப்ப்ஸ். (Apps.) வசதிகளையும், 3ஜி தொடர்பையும் கொண்டிருக்கும். இத்தகவ்லை வோடாஃபோனின் தலைமை விற்பனை அதிகாரி குமார் ராமநாதன் கூறியுள்ளார்.
வோடாஃபோன் வாடிக்கையாளர்களுக்கு சில அறிமுகச் சலுகைகளும் வழங்கப்படும். 3ஜி தொடர்பு தொடர்பாக இரட்டை டாட்டா சலுகையும் கிடைக்கும்.
புதிய வோடாஃபோன் ஸ்மார்ட் கைப்பேசியில் மேலும் சில முக்கிய அம்சங்கள்:
1) 2.8 " அகல தொடுதிரை
2) 2 மெகா பிக்ஸெல் காமரா
3) வீடியோ பதிவு வசதி, MP4/3GP play back
4) 32 ஜிபி வரை மெமரி விரிவுபடுத்திக்கொள்ளும் வசதி (2ஜிபி கார்டு இலவசம்)
5) ஸ்டீரியோ எஃப்.எம் மற்றும் எம்பி 3
இளைஞர் வட்டத்தை நிச்சயம் அதிரவைக்கும் வோடாஃபோன் ஸ்மார்ட் போன் என்பதில் ஐயமில்லை!
Want to write for Maniyosai?
Download our android app