புதுதில்லி: தங்கத்திற்கு ஹால்மார்க் தர முத்திரையை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை இன்று (ஜன.4) வழங்கியது.
தற்போது தங்கம், சிமெண்ட், மினரல் குடிதண்ணீர், பால் பொருட்கள் உள்ளிட்ட 77 பொருட்களுக்கு மத்திய அரசின் நுகர்வோர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் இந்திய தர நிர்ணய வாரியம் (பி.ஐ.எஸ்.) ஹாம்மார்க் தர முத்திரையை வழங்கி வருகிறது.
இது வரை, இந்த ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப் படவில்லை. இதனால் நுகர்வோர் நலன் பாதிக்கப் படுவதாக பரவலான குறை நிலவியது.
இந்நிலையில், ஹால்மார்க் தர முத்திரையை தங்கம், சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களுக்கு கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்புதல், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று (ஜன.4) நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப் பட்டது.
மேலும், தகவல்தொழில்நுட்பத் துறை, உயிரித் தொழில்நுட்பத் துறை ஆகிய வளர்ந்து வரும் துறைகளுக்கும் தர நிர்ணயம் செய்யவும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹால்மார்க் முத்திரை பெறாத பொருட்களை தயாரிப்போருக்கு கடுமையான தண்டனை வழங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Want to write for Maniyosai?
Download our android app