புதுதில்லி: 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பொதுவாக, பிப்ரவரி மாதம் கடைசி நாளில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் படும். இந்த ஆண்டு ஜனவரி 30 முதல் மார்ச் 3 வரை உ.பி., கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் முடியும் வரை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படுவதில் சிக்கல் உள்ளது.
இது குறித்து மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (ஜன.2) செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டமன்ற தேர்தல்களுக்கு பிறகே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் படும் என்றும்; ஆனால் பட்ஜெட் தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை என்றும் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app


