maniyosai.com

You are here: Home செய்திகள் நிர்வாணக் காட்சிக்கு சென்ஸார் போர்டு பச்சைக் கொடி

நிர்வாணக் காட்சிக்கு சென்ஸார் போர்டு பச்சைக் கொடி

E-mail Print
Share/Save/Bookmark

kadhal arangamபுதுதில்லி: இயக்குனர் பிரவேஷ் பரத்வாஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘மிஸ்டர் சிங் மிஸஸ் மேத்தா’ என்ற இந்தி படத்தில் நடிகை அருணா ஷீல்ட் நடித்த நிர்வாணக் காட்சி இலம் பெற்றுள்ளது. இதற்கு சென்ஸார் போர்டு வெட்டு இன்றி அனுமதியும் அளித்துள்ளது.

மிஸ்டர் சிங் மிஸஸ் மேத்தா என்ற இந்திப் படம் வட இந்தியாவில் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவி இடையேயான நம்பிக்கை துரோகத்தை விளக்கும் படம் இது. இந்தப் படத்தில் மூன்று படுக்கையறை காட்சிகள் உள்ளனவாம். இதில் நடிகை அருணா ஷீல்ட் என்பவரின் முழு நிர்வாணக் காட்சி இடம் பெற்றுள்ளதாம்.

இதற்கு அனுமதி அளிக்க தயங்கிய தணிக்கை குழு, மறு பரிசீலனை குழுவுக்கு படத்தை அனுப்பியது. இந்தப் படத்தை பார்த்த மறு பரிசீலனைக் குழு, நிர்வாணக் காட்சிகளுக்கு வெட்டு இன்றி அனுமதி அளித்துள்ளது.

இது பற்றி இப்படத்தின் இயக்குனர் பிரவேஷ் பரத்வாஜ் கூறுகையில்,”படத்தில் நிர்வாணக் காட்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த சென்ஸார் போர்ட் வெட்டு இன்றி படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.” என்றார்.

தமிழில் வேலு பிரபாகரன் இயக்கிய காதல் அரங்கம் என்ற படத்தில் இடம் பெற்ற அரை நிர்வாணக் காட்சிக்கு அனுமதியளிக்க தணிக்கை குழு மறுத்தது என்பது குறிப்பிடத் தக்கது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits