புதுதில்லி: மும்பை, ஐதரபாத் ஆகிய நகரங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்தக் கிரிக்கெட் தொடருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப் படும் என மத்திய அரசு கூறியுள்ளது.
உள்துறை அமைச்சகம், ஐபிஎல் போட்டிகளை நடத்துபவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாகவும், கிரிக்கெட் போட்டிகளுக்கு மத்திய அரசு உரிய பாதுகாப்பு அளிக்கும் என உறுதி கூறியுள்ளதாகவும், நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பு, ஐதரபாத்தில் நடக்கவிருந்த துவக்க நாள் ஐபிஎல் போட்டி, தெலுங்கானா பிரச்சினையால் மும்பைக்கு மாற்றப் பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் தாக்கப் படுவதால், ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு சிவசேனா கட்சியிடம் இருந்து
மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது
Want to write for Maniyosai?
Download our android app





