புதுதில்லி: பள்ளிகளில் மாணவர்களை சரமாரியாக தாக்கும் ஆசிரியர்களுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் ஆசிரியர்களால் தாக்கப் படுவது அதிகரித்து விட்டது. மாணவர்களுக்கு ஒழுக்கம் வருவதற்காக, லேசாக அடித்தால் கூட பரவாயில்லை. பல சமயங்களில்,மாணவர்களுக்கு, நிரந்தர உடல் ஊனமோ, மன பாதிப்போ ஏற்படும் அளவு ஆசிரியர்கள் தாக்குகின்றனர். இதனால், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து விட்டது.
இதனை தடுக்க மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் புது வழிமுறைகளை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன் படி, மாணவர்களை ஆசிரியர்கள் அடிப்பதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்த தடையை முதல் தடவை மீறினால், ஓராண்டு சிறை தண்டனையோ, ரூ.50,000 அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப் படும். மீண்டும் தடையை மீறினால், 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் படுவார்கள். கூடுதலாக ரூ.25,000 அபராதம் விதிக்கப் படும்.
ஒவ்வொரு பள்ளிக்கூடங்களிலும், குழந்தைகள் உரிமை குழு அமைக்கப் படும். தாங்கள் தாக்கப் பட்டால், மாணவர்களே இங்கு புகார் அளிக்கலாம்.
இது தவிர, குழந்தைகளுக்கான எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் சில மாற்றங்களை செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் படி, குழந்தைகளை க்கினாலோ, பாலியல் தொந்தரவுகள் செய்தாலோ, தகாத சொற்களால் திட்டினாலோ, பெற்றோர், உறவினர், அக்கம்பக்கத்தினர் என யாராக இருந்தாலும் தண்டனை கிடைக்கும்.
Want to write for Maniyosai?
Download our android app





