maniyosai.com

You are here: Home செய்திகள் என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி: வைகோ குற்றச்சாட்டு

E-mail Print
Share/Save/Bookmark

vaikoசென்னை: என்.எல்.சி. நிறுவனத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க, 2002ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்த நேரத்தில், நாடாளுமன்றத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும் மதிமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன்.


அன்றைய பிரதமர் வாஜ்பாய் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பளித்து, என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம் என அறிவித்தார். தற்போது மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சியின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.

மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது.

தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

14 January 2012, 18.40 தலைப்புச் செய்திகள்
கறுப்பு பணம் பற்றி பேசிய பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிப்பு
புதுதில்லி: கறுப்பு பணத்திற்கு எதிராக பேசிய யோகா குரு பாபா ராம்தேவ்...மேலும்...
0 Comments , 124 Hits
16 January 2012, 20.59 செய்திகள்
குஜராத்தும், தமிழ்நாடும் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன - நரேந்திர மோடி
சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஆட்சி புரியும்...மேலும்...
0 Comments , 172 Hits
31 March 2012, 20.14 செய்திகள்
மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் : வைகோ வலியுறுத்தல்
சென்னை: மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக...மேலும்...
0 Comments , 53 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits