maniyosai.com

You are here: Home செய்திகள் இந்தியர்களின் வரிப் பணத்தை சீனாவுக்கு கொடுக்கும் இலங்கை - ஜெ. அதிர்ச்சி தகவல்

இந்தியர்களின் வரிப் பணத்தை சீனாவுக்கு கொடுக்கும் இலங்கை - ஜெ. அதிர்ச்சி தகவல்

E-mail Print
Share/Save/Bookmark

Jayalalithaசென்னை: இலங்கையில் மறு சீரமைப்பு பணிகளுக்காக இந்தியா கொடுத்த இந்தியர்களின் வரிப் பணமான 1000 கோடி ரூபாயை, சீனாவுக்கு இலங்கை கொடுத்துள்ளதாக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறு சீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது.இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப்பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது.

1962ம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போது இருந்த இந்திய அரசு சகோதரத்துவ மனப்பான்மையுடன் சீனாவோடு  உறவாடிக் கொண்டிருந்த போது கூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல்  தொடுத்தது.

நாம் எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் அதே வரலாறு மீண்டும் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. வட இலங்கையில் சீனர்கள் பெருமளவில் குவிந்திருக்கிறார்கள் என்ற ஊடகங்களின் தகவல் உண்மையாக இருக்குமேயானால், இந்தியாவிற்கு ஆபத்து எதிர் நோக்கியிருக்கிறது என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை.

வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது.

27 ஆண்டு கால இனப்போர் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப்போரில் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக் கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்.

இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி இந்திய அரசு தலையிட்டு நடவடிக்கை  எடுக்க வேண்டும். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும். கடினமாக நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

27 January 2012, 21.13 சினிமா செய்திகள்
முதல்வர் ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (ஜன.27)...மேலும்...
0 Comments , 140 Hits
28 April 2012, 12.55 செய்திகள்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : திமுக நிலைப்பாடு குறித்து மே 17 அறிவிப்பு - கருணாநிதி
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மே 17ம்...மேலும்...
0 Comments , 30 Hits
31 March 2012, 17.58 தலைப்புச் செய்திகள்
சசிகலா மீதான நடவடிக்கைகள் ரத்து : ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: சசிகலா மீதான கட்சி ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து...மேலும்...
0 Comments , 61 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits