கொச்சி: அண்ணல் காந்தியடிகள் பற்றிய அனிமேஷன் படமான ‘மை டியர் பாபுஜி’ ஆகஸ்டு 15ம் தேதி வெளியிடப் படுகிறது.
அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை அனிமேஷன் மூலம் சித்தரிக்கும், 45 நிமிடங்கள் ஓடும் படத்தை மகாத்மா காந்தி தேசிய இயக்கம் இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு 15ம் தேதி வெளியிட உள்ளது.
இந்தப் படத்தை ரித்தீஷ் பழையவீட்டில் (பெயர்) தயாரிக்க, ஏ.கே.சைபர் இயக்கியுள்ளார். இந்தப் படம் முதலில் மலையாளத்தில் வெளியாகிறது. பின்னர், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்து வெளியிடப் படும் என்று மகாத்மா காந்தி தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. ‘மை டியர் பாபுஜி’ படம், இன வெறி, தீவிரவாதம் ஆகியவை பற்றி குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் தயாரிக்கப் பட்டுள்ளதாம்.
இந்தப் படத்தில் இடம்பெறும் சிறப்பு யுக்திகள் குழந்தைகளை பரவசத்தில் ஆழ்த்தும் என தான் நம்புவதாக இயக்குனர் கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?





