சென்னை, : திரைப்படம் மற்றும் சின்னத்திரைக் கலைஞர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி இன்று காலை (ஆக.22) சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார்.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடுகள் கட்ட சென்னை அடுத்த பையனூரில் 96 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
15 ஆயிரம் வீடுகள் கொண்ட புதிய சினிமா நகரத்துக்கு கலைஞர் நகரம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கட்டிடப் பணிகளை முதல்வர் கருணாநிதி இன்று (ஆக.22) பையனூரில் நடக்கும் பிரமாண்டமான விழாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், தொடர் மழை காரணமாக, பையனூரில் நடக்கும் விழா ரத்து செய்யப் பட்டது. அதற்குப் பதிலாக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் காலை 10 மணிக்கு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு கட்டிடப் பணிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது, தன்னையும் திரையுலகையும் யாராலும் பிரிக்க முடியாது என கருணாநிதி கூறினார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், மம்மூட்டி, ஜிதேந்திரா, வெங்கடேஷ், நடிகைகள் குஷ்பூ, ரோஜா, ராதிகா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Want to write for Maniyosai?






