maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் பிரகாஷ் ராஜ் - போனி வர்மா திருமணம் நடந்தது

பிரகாஷ் ராஜ் - போனி வர்மா திருமணம் நடந்தது

E-mail Print
Share/Save/Bookmark

prakash raj with pony vermaமும்பை: நடிகர் பிரகாஷ்ராஜ் - போனி வர்மா திருமணம் இன்று (ஆக.24) மும்பையில் நடந்தது.

டூயட் படத்தின் மூலம் தமிழில் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப் பட்டவர் பிரகாஷ்ராஜ். தன் நடிப்பு திறமை மூலமாக குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றார் பிரகாஷ் ராஜ்.

பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி லலிதாகுமாரியை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர்கள் சமீபத்தில் விவகாரத்து செய்தனர். விவாகரத்துக்கான காரணத்தை பிரகாஷ்ராஜ் ஊடகங்களுக்கு தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, நடன இயக்குனர் போனி வர்மாவை பிரகாஷ் ராஜ் திருமணம் செய்து கொள்ள போவதாக பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டன. இது பற்றி பிரகாஷ்ராஜ் எதையும் பேசாமல் மெளனம் சாதித்து வந்தார். அண்மையில் நடந்த ‘இனிது இனிது’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பிரகாஷ் ராஜூடன் போனி வர்மாவும் கலந்துக் கொண்டார். அவரை தன் தோழி என நிருபர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் பிரகாஷ் ராஜ். அவர்கள் திருமணம் பற்றி நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமல் நழுவி விட்டார் பிரகாஷ்ராஜ்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜூக்கும், போனி வர்மாவுக்கும் மும்பையில் இன்று காலை (ஆக.24) 10.30 மணிக்கு திடீர் திருமணம் நடந்தது. இந்து முறைப்படி நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 24 August 2010 18:13 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits