சென்னை: சென்னையில் நாளை (03/09/2010) நடைப்பெறவிருக்கும் தனது இரண்டாம் மகள் சௌந்தர்யாவின் திருமணத்திற்கு ரசிகர்கள் நேரில் வரவேண்டாம். மணமக்களுக்கு மனமார ஆசிர்வதித்தால் போதும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. இவர் ஆக்கர் ஸ்டுடியோவின் உரிமையாளர் ஆவார். அவர் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வினை மணமுடிக்கிறார். அவர்களது திருமணம் நாளை (03/09/2010) சென்னையில் நடைப்பெறுகிறது.
‘எனது ரசிகர்கள் அனைவரையும் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என ஆசைதான். இருப்பினும் இடமின்மை மற்றும் சில காரணங்களுக்காக திருமணத்திற்கு நேரில் வரச்சொல்லி அழைக்க முடியவில்லை. ரசிகர்கள் யாரும் நேரில் வர சிரமப்பட வேண்டாம். மனமார மணமக்களை ஆசிர்வதித்தால் போதும்’ என ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Want to write for Maniyosai?



