பாலிவுட்: ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் அசின் நடிக்க மறுத்ததாக வெளியான செய்தியை அசின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அசின் கூறியதாவது:
"ஸ்ரீதேவியுடனும், அவர் கணவர் போனி கபூருடனும் எனக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. ஸ்ரீதேவி நடிக்க கூப்பிட்டால், நான் இல்லை என மறுக்க மாட்டேன். ஆனால், என்னை ஸ்ரீதேவி நடிக்க அழைக்கவே இல்லை." இவ்வாறு அசின் கூறியுள்ளார்.
இது குறித்து போனி கபூர் கூறுகையில், "2 படங்களுக்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஸ்கிரிப்ட் முடிவதற்குள் நடிகர் தேர்வை செய்யும் ஆள் நான் இல்லை. ஸ்கிரிப்ட் வேலை முடிந்த பின் நடிகர்களை அறிவிக்கிறேன்." என்றார்.
Want to write for Maniyosai?



