சென்னை: கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்தை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கவுள்ளார்.
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதனை அமிதாப் பச்சன் தொகுத்து வருகிறார். ஷாருக்கானும் சில காலம் தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சி, 'கோடீஸ்வரன்' என்ற பெயரில் தமிழில் முன்பு சன் டிவியில் ஒளிபரப்பு ஆகி வந்தது. இதனை சரத்குமார் தொகுத்து வந்தார். இது வர்த்தக ரீதியில் வெற்றி அடையாததால் சில காலத்தில் நிறுத்தப் பட்டது.
இந்நிலையில், குரோர்பதி நிகழ்ச்சி மீண்டும் தமிழில் எடுக்கப் படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சூர்யாவுடன் ஒப்பந்தம் போடப் பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கான 'ஒத்திகை படப்பதிவு' வடபழனி ஏவிஎம் படப்பதிவு கூடத்தில் நடந்து வருகிறது. குரோர்பதி நிகழ்ச்சியின் படப்பதிவில் மாதம்தோறும் ஆறு நாட்கள் சூர்யா பங்கேற்பார் என தெரிகிறது.
சூர்யா தொகுத்து வழங்கும் முதல் சின்னத்திரை நிகழ்ச்சி இதுதான் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்.
Want to write for Maniyosai?
Download our android app


