கோலிவுட்: இந்தியில் அமீர்கான் நடித்து சூப்பர் ஹிட் ஆன 3 இடியட்ஸ் படத்தை தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கப் போவது உறுதி ஆகி விட்டது. எந்திரன் ரிலீஸுக்குப் பிறகு 3 இடியட்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எந்திரன் திரைப்படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார் இயக்குனர் ஷங்கர். எந்திரன் விரைவில் திரைக்கு வரப் போகிறது. இந்நிலையில், 3 இடியட்ஸ் படத்தை தமிழிலும், தெலுங்கிலும் ஷங்கர் இயக்கப் போகிறார். இந்தப் படத்தில் 3 இடியட்ஸாக விஜய், சிம்பு, மாதவன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து சத்யராஜும் நடிக்கப் போகிறாராம். தெலுங்கில் விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளாராம்.
3 இடியட்ஸ் படத்திற்கான தமிழ்-தெலுங்கு மொழிபெயர்ப்பு உரிமத்தை ஜெமினி பிலில் சர்க்கியூட் நிறுவனம் பெற்றுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




hi graphics is very nice. vijay simbhu themselves will wonder if they see this.