maniyosai.com

You are here: Home செய்திகள் சினிமா செய்திகள் ஐஸ்வர்யா ராய் பெண் குழந்தைக்கு தாயானார்.

ஐஸ்வர்யா ராய் பெண் குழந்தைக்கு தாயானார்.

E-mail Print
Share/Save/Bookmark

மும்பை: முன்னாள் உலக அழகியும், பாலிவுட் முன்னனி நட்சத்திரமுமான ஐஸ்வர்யா ராய் இன்று (16/11/2011) காலை மும்பை செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் பெண் குழந்தை ஈன்றெடுத்தார். இத்தகவலை அவரது மாமனாரும், பிரபல நடிகருமான அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ராயின் கணவரான நடிகர் அபிஷேக் பச்சனும் தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை முதன்முதலாக தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் பெற்றோர், சகோதரன் ஆதித்யா, கணவர் அபிஷேக் பச்சன், மாமனார் மாமியார் அமிதாப் பச்சன்,ஜெயா பச்சன் மற்றும் அபிஷேக்கின் சகோதரி ஸ்வேதா என குடும்பத்தினர் அனைவரும் உடன் இருக்கின்றனர்.

ஐஸ்வர்யா கருவுற்ற செய்தியை அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்ட அன்றே அவருக்கு 2000 வாழ்த்து செய்திகள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டது. அவரது வீட்டிற்கும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் வந்து கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

மீடியாவை தவிர்ப்பதற்காகவே சற்று தொலைவில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு தேர்ந்தெடுத்திருந்தனர். இருப்பினும் மீடியாவின் ஆர்வத்திலிருந்து தப்ப முடியவில்லை. அதனால் ஐஸ்வர்யா ராயின் பிரசவம் குறித்து விதவிதமான வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. உச்சகட்டமாக 11/11/11 அன்று குழந்தை பிறக்கப் போகிறது எனவும் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறக்கவுள்ளது என்று சமீபத்தில் தகவல் வெளியானது. வதந்திகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது,

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 16 November 2011 11:54 )  


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits