சென்னை: நடிகை அசின் இலங்கை சென்றுள்ளப் பிரச்சினையில் அசின் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் ராதாரவி கூறியுள்ளார்.
இலங்கை பிரச்சினை காரணமாக தமிழ் திரையுலகினர் யாரும் இலங்கைக்கு செல்லக் கூடாது என நடிகர் சங்கம் சார்பாகக் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த எதிர்ப்பையும் மீறி நடிகை அசின் இந்தி திரைப்பட படப்பிடிப்புக்கு இலங்கை சென்றுள்ளார். இதை எதிர்த்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதுக் குறித்து அசின் கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவிலிருந்து யாரும் இலங்கை செல்வதில்லையா? இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை செல்வதை ஏன் தடுப்பதில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ராதாரவி இன்று (25/07/2010) ஒரு பேட்டியில், எங்களுக்கெல்லாம் நான்கறிவு இருப்பதுப் போலவும் அவருக்கு மட்டும் ஆறறிவு இருப்பதுப் போலவும் பேசுகிறார். அவர் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்கும் வரை அசினின் எந்த படத்திற்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app


