கோலிவுட்: கவர்ச்சிக் கன்னி சோனாவின் கன்னித் தயாரிப்பில் கனிமொழி படம் ஆகஸ்ட் 6ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அவருடைய அடுத்த படமான பாக்யராஜ் 2010 படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப் பட்டுள்ளது.
குசேலன், அழகர் மலை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சோனா. இவர் நடிப்பது தவிர தயாரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இவர் தயாரிப்பில் ‘கனிமொழி’ படம் வரும் ஆகஸ்டு 6ம் தேதி வெளியாக உள்ளது. இது தவிர, பாக்யராஜ் 2010, ஓடு மச்சி ஓடு ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார் சோனா.
பாக்யராஜ் 2010 படத்தில் பிரேம்ஜி அமரன் கதாநாயகனாக நடிக்கிறார். கனிமொழி ரிலீஸ் ஆகும் வரை, பாக்யராஜை நிறுத்தி வைத்துள்ளார் (ஷூட்டங்கை!) சோனா. இதற்கு, ஜோசியரின் அறிவுரைதான் காரணமாம். மீண்டும் ஆகஸ்டு 16ம் தேதி பாக்யராஜ் 2010 படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனராம்.
Want to write for Maniyosai?
Download our android app


