கோலிவுட்: சிக்குபுக்கு படத்தின் இசை வெளியீடு விழா ஆகஸ்டு 13ம் தேதி நடக்கவுள்ளது.
ஆர்யா, ஸ்ரேயா, பிரீத்திகா நடிப்பில் விரைவில் திரைக்கு வரப் போகும் திரைப்படம் சிக்குபுக்கு. இதை அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ளார். இவர் மறைந்த இயக்குனர் ஜீவாவின் உதவியாளராக இருந்தவர்.
மதராஸப்பட்டணம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சிக்குபுக்கு படமும் ஆர்யாவுக்கு வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழில் தொடர்ந்து தாக்கு பிடிக்க இந்தப் படத்தையே பெரிதும் நம்பியுள்ளாராம் ஸ்ரேயா. பிரபல பாலிவுட் நடிகை அம்ரிதா ராவ்வின் தங்கை பிரீதா, ப்ரீத்திகா என்ற பெயரில் இந்தப் படத்தில் அறிமுகம் ஆகிறார். இந்தப் படத்தின் அநேகமான பகுதிகள் ஆஸ்திரியாவில் படமாக்கப் பட்டுள்ளதாம்.
மீடியா ஒன் குலோபல் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு இசை ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லெவிஸ் (கலோனியல் கசின்ஸ் இரட்டையர்கள்).
நகரத்து காதலை மையமாக கொண்டுள்ள படமாம் சிக்குபுக்கு. இந்த பாணியிலான படம் தமிழில் இது வரை வந்ததில்லை என்று இந்தப் பட யூனிட் சிலாகிக்கிறது. பார்க்கலாம்!!
Want to write for Maniyosai?
Download our android app


