இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு கிறிஸ்தவர்கள் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து தமிழில் வெளிவந்து ஹிட் ஆன படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இதில் இடம்பெற்றுள்ள ஹோசானா என்ற பாடல் மிகவும் பிரபலம். இந்தத் திரைப்படம் 'ஏக் தீவானா தா' என்ற பெயரில் தற்போது இந்தியில் எடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், ' ஹோசானா' என்ற சொல் கிறிஸ்தவ வழிப்பாட்டு பாடல்களில் பயன்படுத்தப் பட்டு வருவதாகவும், அந்த வார்த்தை காதல் பாடலில் பயன்படுத்தப் பட்டிருப்பதாகவும் சி.எஸ்.எஃப் என்ற கிறிஸ்தவ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொது செயலாளர் ஜோசப் தைஸ் கூறுகையில், ' ஹோசானா என்ற சொல்ல பைபிளில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சொல்ல இயேசு கிறிஸ்துவை குறிக்க கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஒரு இளைஞன், தான் காதலிக்கும் பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த இந்த சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது போன்ற பாடலில் இந்து அல்லது இஸ்லாம் மதத்தை சார்ந்த சொற்கள் பயன்படுத்தப் படுமா? ஹோசானா என்ற சொல் காதல் பாடலில் பயன்படுத்தப் பட்டு கொச்சை படுத்தப் பட்டுள்ளது.' என்றார்.
இது குறித்து சி.எஸ்.எஃப். அமைப்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடலாசிரியர் ஜாவெத் அக்தர் உள்ளிட்டோருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
ஹோசானா என்ற சொல்லுக்கு 'காப்பாற்றும்' என்று அர்த்தமாம்!
Want to write for Maniyosai?
Download our android app


