பாலிவுட்: தமிழில் சில ஆண்டுகளுக்கு முன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடைப் போட்ட ‘காக்க காக்க’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதை விபுல் ஷா இயக்குகிறார். இதில் ஜோதிகா செய்த கதாப்பாத்திரத்தில் தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமண்யம் போன்ற படங்களில் நடித்த ஜெனிலியா நடிக்கிறார். ஜெனிலியா தமிழில் பெரும்பாலும் ‘லூஸுப்பெண்’ கதாப்பாத்திரத்திலேயே நடிப்பதால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை.
தமிழில் மிடுக்கான போலிஸ் அதிகாரி கதாநாயகனாக சூர்யாவும் அவரது காதல் மனைவியாக ஜோதிகாவும் நடித்திருப்பார்கள். இப்பொழுது இந்தியில் சூர்யாவுக்கு பதில் ஜான் அபிரகாமும், ஜோதிகாவுக்கு பதில் ஜெனிலியாவும் நடிக்கின்றனர். நிஷிகாந்த் காமத் இப்படத்தை இயக்குகிறார். இவர் தமிழில் எவனோ ஒருவன் படத்தை இயக்கியவர்.
Want to write for Maniyosai?
Download our android app


