கோலிவுட்: நடித்தால் கதாநாயகனாகதான் நடிப்பேன். குணச்சித்திர வேடங்களில் நடிக்க விருப்பமில்லை என நடிகர் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
கரகாட்டக்காரன், எங்க ஊரு பாட்டுக் காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ராமராஜன். இவர் தற்போது கதாநாயகனாக நடித்து வெளிவர தயாராக இருக்கும், ‘மேதை’ படத்தின் இசை வெளியீடு அண்மையில் சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ராமராஜனின் ரசிகர்கள் (!) திரண்டிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமராஜன் பேசியதாவது:
“8 ஆண்டுகளுக்கு பிறகு மேதை படத்தில் நடிக்கிறேன். இடைப்பட்டக் காலத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், எனக்கு கதாநாயகனாக நடிக்க மட்டுமே விருப்பம்.
நான் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகன். அவர் கதாநாயகனாக நடிக்க வந்த பிறகு, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை. அவர் வழியையே பின்பற்ற விரும்புகிறேன்.”
இவ்வாறு ராமராஜன் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app


