கோலிவுட்: 50 நாட்களை கடந்துள்ள நிலையிலும் மதராசப்பட்டணம் அரங்கம் நிறைந்த காட்சிகளோடு வெற்றி நடை போட்டு வருகிறது.
ஆர்யா, எமி ஜாக்சன் நடிப்பில் விஜய் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மதராசப்பட்டணம். இந்தப் படத்தை கல்பாத்தி அகோரம் தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டிருந்தார்.
1940களில் இருந்த சென்னை நகரின் அழகை இந்தப் படம் துல்லியமாக பதிவு செய்திருந்தது.
மதராசப்பட்டணம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையிலும், சென்னையிலேயே 7 திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக் கொண்டுள்ளது. சுமாரான படத்தைக் கூட தொலைக்காட்சிகளில் தினம்தோறும் நூறு முறை விளம்பரப் படுத்தி சிலர் ஓட்டிக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படம் உண்மையிலேயே மிகப் பெரிய வெற்றி பெற்றிருப்பது, நல்ல படங்களை கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app


