கோலிவுட்: நடிகை திவ்யா ஸ்பந்தனா காதல் 2 கல்யாணம் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார். ஆனால் அவர் நிம்மதியாக இல்லை. காரணம் கண்ட நேரங்களில் அவருக்கு வந்து தொல்லை கொடுக்கும் குறுஞ்செய்திகள்.
தமிழில் குத்து, பொல்லாதன், வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் நடித்தவர் திவ்யா ஸ்பந்தனா. குத்து படத்திற்காக ரம்யா என பெயர் வைத்துக் கொண்டதால் குத்து ரம்யா என்றும் அழைக்கப் படுகிறார்.
இவர் பெங்களூருவை சேர்ந்தவர். இவர் காதல் 2 கல்யாணம் படத்தில் நடிக்க சென்னை வந்துள்ளார்.
ஆனால், யாரோ ஒரு ரசிகர் அவரை கண்ட நேரங்களில் எஸ்எம்எஸ் செய்து இம்சை செய்கிறாராம். இதனால் மனம் வெம்பி போயிருக்கும் திவ்யா ஸ்பந்தனா தன் ட்விட்டர் இணையப் பக்கத்தில் புலம்பி தள்ளியுள்ளார்.
அவர் எழுதியிருப்பதாவது:
”தயது செய்து எனக்கு உதவுங்கள். +9196862***** என்ற எண்ணில் இருந்து ஒருவன் எனக்கு கண்ட நேரத்தில் தொலைபேசுகிறான். கிறுக்குத் தனமான எஸ்.எம்.எஸ் அனுப்புகிறான். நாகரீகம் என்றால் என்ன என்று அவனுக்கு கற்பிக்க முடியுமா? இவனுக்காக என்னால் என் செல் நம்பரை மாற்ற முடியாது. போலீஸில் புகாரளித்தால் விஷயம் பூதாகாரம் ஆகி விடும்.”
இவ்வாறு திவ்யா ஸ்பந்தனா எழுதியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





