சென்னை: பழம்பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத் (70) உடல்நலக் குறைவால் இன்று (டிச.9) காலமானார்.
அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், மரோ சரித்ரா உட்பட 52 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் லோக்நாத். அபூர்வ ராகங்கள் படத்தில் சிறந்த ஒளிப்பதிவுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப் பட்டது. இவர் கடந்த சில காலமாக புற்றுநோயால் அவதிப் பட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று (டிச.9) பி.எஸ்.லோக்நாத் காலமானார்.
Want to write for Maniyosai?
Download our android app




