தில்லி: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் வாழ்க்கை வரலாறு நூல் இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் அன்று (12-12-12) வெளியிடப் படவுள்ளது.
நமன் ராமசந்திரன் எழுதியுள்ள இந்த நூலை பென்குவின் பதிப்பகம் வெளியிடுகிறது.
இது குறித்து பென்குவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 'ரஜினிகாந்த்தின் முதல் திரைப்படத்தில் ஆரம்பித்து, ராணா திரைப்படம் வரை, அவரது திரையுலக வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்த தகவல்கள் இடம்பெறும். ரஜினிகாந்த்தின் எளிய சுபாவம் குறித்தும், திரையில் அவரது சூப்பர்ஸ்டார் இமேஜ் குறித்தும் இது வரை செய்யப் படாத அளவு ஆய்வுகள் இந்த நூலில் செய்யப் பட்டுள்ளது. ரஜினியின் அபூர்வ புகைப்படங்களும், சொற்றொடர்களும் ரஜினியின் வாழ்க்கை வரலாறு நூலில் இடம்பெறும்.' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app




