சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (ஜன.27) நேரில் சந்தித்து, தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சம் நன்கொடை அளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, முதல்வர் ஜெயலலிதா, ரஜினியிடம் அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
அப்போது, தான் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது தமிழக அரசு செய்த உதவிகளுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார்.
ரஜினிகாந்த், விரைவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவிருப்பதாக அவரது ரசிகர்கள் நடத்தும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





