சென்னை: தனுஷுடன் தன்னை இணைத்து செய்தி வெளியிட்ட குமுதம் வார இதழுக்கு, கமலஹாசன் மகளும், வளர்ந்து வரும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, ' 3' என்ற பெயரில் திரைப்படம் ஒன்றை தயாரித்து, இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது கணவர் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்தில் முதலில் அமலாபால் கதாநாயகியாக நடிக்க இருந்தார். அவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கப் பட்ட நிலையில், திடீரென அவர் மாற்றப் பட்டு ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக ஆக்கப் பட்டார்.
இந்நிலையில், தனுஷுடன், ஸ்ருதி ஹாசன் நெருக்கம் காட்டி வருவதாகவும், இதனையடுத்து தனுஷை, மாமனார் ரஜினிகாந்த் எச்சரித்ததாகவும் சில இணையதளங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது.
இதே செய்தியை குமுதம் வார இதழும் வெளியிட்டது.
இதனையடுத்து, தனுஷுடன் தன்னை இணைத்து செய்தி வெளியிட்ட குமுதம் வார இதழுக்கு ஸ்ருதி ஹாசன் நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்கு குமுதம் பதிலளிக்காத பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app


