
2011ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களின் டாப் 10 தரவரிசையை கீழே கொடுத்துள்ளோம். வர்த்தக ரீதியாக படம் அடைந்த வெற்றி அல்லது அதிகம் பேசப் பட்ட படங்களை அடிப்படையாக வைத்து இந்த தரவரிசையை எழுதியுள்ளோம். இந்த தரவரிசை குறித்த கருத்துக்களை வாசகர்கள் பதியலாம்.
(1) மங்காத்தா: அஜித், த்ரிஷா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் ரூ.130 கோடி வசூல் செய்தது. சன் பிக்சர்ஸ் விநியோகித்த படம் என்பதால், சன் டிவி மூலம் செய்யப் பட்ட விளம்பரமும் படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம்.
(2) ஏழாம் அறிவு: சூர்யா, ஸ்ருதி ஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த இந்தப் படம் கிட்டதட்ட ரூ.99 கோடி வசூல் செய்தது. போதி தர்மனை மையமாக வைத்து ஊடகங்களில் செய்யப் பட்ட விளம்பரங்கள் படத்தின் வெற்றிக்கு கை கொடுத்தது.
(3) வேலாயுதம்: விஜய், ஜெனிலியா நடிக்க ஜெயம் ராஜா இயக்கத்தில் தீபாவளிக்கு வந்த வேலாயுதம் திரைப்படம் ரூ.90 கோடியை வசூல் செய்தது. முதலில் குறைந்த எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடப் பட்ட இந்தப் படம், மக்களின் ஆதரவைத் தொடர்ந்து அதிக தியேட்டர்களில் வெளியிடப் பட்டது.
(4) கோ : ஜீவா, கார்த்திகா நாயர் நடிக்க, கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தின் பட்ஜெட் ரூ.15 கோடி; வசூல் ரூ.50 கோடி. தேர்தல் வாக்குப்பதிவுக்கும் முடிவுகள் வெளியாவதற்கும் இடையில் இருந்த இழுவையான ஒரு மாதக் காலத்தில், வேறு எந்த நல்ல படமும் வராத நேரத்தில் கோ படம் வெளியானது, படத்தின் வெற்றிக்கு ஒரு முதன்மை காரணமாக அமைந்தது.
(5) காவலன்: மலையாளத்தில் ஹிட் அடித்த பாடிகார்ட் படத்தின் ரீமேக்கான காவலன் படம் பொங்கலுக்கு வெளியாகி ரூ.45 கோடி வசூல் செய்தது. நீண்ட காலத்திற்கு பிறகு விஜய்க்கு நல்ல பெயரை வாங்கித் தந்தப் படம் காவலன்.
(6) ஆடுகளம்: தனுஷ், தாப்ஸி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் விநியோகித்தது. பொங்கலுக்கு வெளிவந்த இந்தப் படம் ரூ.30 கோடி வசூல் செய்தது. சிறந்த நடிப்பு, சிறந்த இயக்கம் உட்பட 6 தேசிய விருதுகளை அள்ளியது ஆடுகளம்.
(7) தெய்வத்திருமகள்: விக்ரம், அனுஷ்கா, சந்தானம் நடிப்பில் விஜய் இயக்கிய இந்தப் படம் 50 நாட்களுக்கு மேல் ஓடி சென்னையில் மட்டும் ரூ.13 கோடி வசூல் செய்தது.
(8) எங்கேயும் எப்போதும்: குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் சுவாரஸ்யமான திரைக்கதை இருந்தால் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறலாம் என நிரூபித்தது 'எங்கேயும் எப்போதும்'. ஜெய், அஞ்சலி, அனன்யா நடிப்பில் ரூ.5 கோடி பட்ஜெட்டில் முருகதாஸ் தயாரித்த இந்தப் படம் ரூ.20 கோடியை வசூல் செய்தது. ஆனந்தவிகடன் இந்தப் படத்துக்கு 50 / 100 மதிப்பெண் வழங்கியது குறிப்பிடத் தக்கது.
(9) வாகை சூட வா: விமல், இனியா நடிப்பில் 'களவாணி' புகழ் சற்குணம் இயக்கிய இந்த திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியடையவில்லை. இருப்பினும், ஆழமான கதையை நகைச்சுவை இழையாட கையாண்ட விதத்திலும், அழகியல் உணர்ச்சிக்கும் வாகை சூட வா கவனத்தை ஈர்த்தது. இந்தப் படத்திற்கு மணியோசை.காம் 75 / 100 மதிப்பெண் வழங்கி பாராட்டியிருந்தது.
(10) மெளனகுரு: 2011 ஆண்டின் இறுதியில் வெளியாகி நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஓடிக் கொண்டுள்ளது மெளனகுரு படம். அருள்நிதி, இனியா நடித்திருக்கும் இந்தப் படத்தை பத்திரிகைகள் பரவலாக பாராட்டி வருகின்றன.
Want to write for Maniyosai?
Download our android app



