maniyosai.com

You are here: Home செய்திகள் ஊழல் நீதிபதி தினகரன் சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

ஊழல் நீதிபதி தினகரன் சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்பு

E-mail Print
Share/Save/Bookmark

dinakaranகாங்டாக்: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் நீதிபதி தினகரன் இன்று (ஆக.9) சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதிவியேற்றார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் தினகரன். உச்சநீதிமன்ற நீதிபதியாக தினகரன் பதவியேற்கவிருந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, சட்டவிரோதமாக 5 வீட்டுமனை வாரிய வீடுகளை கையகப் படுத்தி வைத்திருந்தது, நிர்ணயிக்கப் பட்ட உச்ச வரம்பை விட அதிகமாக விவசாய நிலங்களை வைத்திருந்தது, அதற்கான விசாரணையின் போது ஆதாரங்களை அழிக்க முயற்சித்தது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப் பட்டன. இதனால், உச்சநீதிமன்ற நீதிபதியாக தினகரன் நியமிக்கப் படவில்லை. இதனைத் தொடர்ந்து, சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு தினகரன் மாற்றல் செய்யப் பட்டார்.

தனக்கு எதிரான தீர்மானம் இன்னும் மக்களவையில் நிலுவையில் உள்ள நிலையில், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இன்று (ஆக.9) பதிவியேற்றுக் கொண்டார் தினகரன். சிக்கிம் மாநில ஆளுநர் பால்மிகி பிரசாத் சிங் தலைமையில் நடந்த பதவி பிரமாண நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் பவன் சாம்லிங், தன் அமைச்சரவை சகாக்களுடன் பங்கேற்றார்.

சிக்கிம் பார் அசோசியேஷனை சேர்ந்த வழக்கறிஞர்கள் இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

09 January 2012, 18.36 தலைப்புச் செய்திகள்
தி.நகர் கடைகளை 6 வாரங்களுக்கு திறக்கலாம் - உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
புதுதில்லி: சென்னை தி.நகரில் முத்திரையிடப் பட்ட கடைகளை 6 வாரக்...மேலும்...
0 Comments , 134 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 458 Hits