maniyosai.com

You are here: Home செய்திகள் தலையங்கம் ஜனநாயகத்திற்கு ஆபத்து

ஜனநாயகத்திற்கு ஆபத்து

E-mail Print
Share/Save/Bookmark

Kapil sibalஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் வெளியிடப் படும் கருத்துக்கள் தணிக்கை செய்யப் பட வேண்டும் என்று மத்திய தொலைதொடர்பு அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார். இத்தகைய இணையதளங்களில் தனி மனித தாக்குதல்கள் மிக அதிகமாக இருப்பதாக அமைச்சர் கருதுவதில் தவறில்லை. ஆனால், பொதுமக்களின் கருத்துக்களை தாங்கிச் செல்லும் இந்த இணையதளங்களை கண்காணிப்பதோ, அதில் வெளியாகும் இடுகைகளை வடிகட்டுவதோ எந்த அளவு சாத்தியம் என தெரியவில்லை.

நம் அண்டை நாடுகளான சீனாவில் இணையதளங்களுக்கு மிக அதிகமாக கட்டுப்பாடு உள்ளது. பாக்கிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளிலும் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டு விடக் கூடும் என்பதால் சமூக இணையதளங்கள் மீது சந்தேக பார்வை இருந்து கொண்டு இருக்கின்றன.

இந்தியாவை பொருத்த வரை மக்களின் கருத்து சுதந்திரத்திற்கு மதிப்பு கொடுக்கும் வகையில் இணையதளங்கள் மீது அவ்வளவாக கட்டுப்பாடு இல்லை. இதனால் அன்றாட அரசியல் நிகழ்வுகளை இணையதளத்தை உபயோகிப்போர் அலசி ஆராயும் நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு விஷயத்திலும் சாமானியர்களுக்கு கூட அதிக அளவிலான விழிப்புணர்வும், மனத் தெளிவும் ஏற்பட இயல்கிறது.

ஊழலுக்கு எதிரான சமீபத்திய போராட்டங்களில் கூட சமூக இணையதளங்கள் அசாத்திய பங்கு வகித்து வருகிறது. அண்ணா ஹசாரேவை பட்டித்தொட்டியெங்கும் பிரபலப் படுத்தியது இணையதளங்கள்தான்.

மக்களின் இத்தகைய விழிப்புணர்வு குறுகிய கால அரசியல் ஆதாயம் தேட நினைப்போருக்கு வேண்டுமென்றால் பாதகமாக அமையலாமே தவிர இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க இன்றியமையாததாகும்.

இணையதளங்களாகட்டும், அச்சு, ஒலி/ஒளி ஊடகங்களாகட்டும் கருத்து சுதந்திரத்திற்கு எந்த முட்டுக்கட்டையும் எந்த கட்டத்திலும் இருக்கக் கூடாது. அவ்வாறு இடைஞ்சல் இருந்தால் அது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விடக் கூடும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

29 March 2012, 19.08 அறிவியல் / தொழில்நுட்பம்
பின்தொடர்வதை நிறுத்து - ட்விட்டரில் குளறுபடி
வாஷிங்டன் : பயனீட்டாளரின் அனுமதி இல்லாமல், தானாகவே பின்தொடர்வதை...மேலும்...
0 Comments , 62 Hits
05 February 2012, 18.03 அறிவியல் / தொழில்நுட்பம்
ஃபேஸ்புக் வயது 8
ஃபேஸ்புக் சமூக வலைதளம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து...மேலும்...
0 Comments , 209 Hits
25 January 2012, 20.54 செய்திகள்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம்
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் தன் கணக்கை...மேலும்...
0 Comments , 125 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits