maniyosai.com

You are here: Home செய்திகள் தலையங்கம் அஜித் பேச்சு: கிணறு வெட்ட பூதம்!

அஜித் பேச்சு: கிணறு வெட்ட பூதம்!

E-mail Print
Share/Save/Bookmark

ajith with CMமுதல்வர் கருணாநிதிக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பாராட்டு விழாக்கள் பற்றி, பத்திரிகைள் எத்தனை கிண்டல் செய்தாலும், கருணாநிதி திருந்துவார் என தோன்றவில்லை.ஒரு மாதத்தில் பெரும்பான்மையான நேரத்தை,வாலி, ஜெகத்ரட்சகன் வகையறாக்களின் பாராட்டு மழையில் நனையவே எடுத்துக் கொள்கிறார் முதல்வர் கருணாநிதி.

பாராட்டு என்பது அக அன்போடு செய்ய வேண்டும். ஆதாயத்துக்காக செய்யக்கூடாது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் இதே சினிமா கும்பல், ஜெயலலிதாவை உட்கார வைத்து ஸ்தோத்திரம் செய்வதும், திமுக ஆட்சிக்கு வந்தால், பிளேட்டை திருப்பி போட்டு கருணாநிதியை பாராட்டி வருவதும் கேலி கூத்து.

இந்தக் கேலி கூத்துக்களில் அனைத்து சினிமா கலைஞர்களுக்கும் உடன்பாடு இருப்பதில்லை என்பது அண்மையில், முதல்வருக்கு நடந்த பாரட்டு விழாவில், நடிகர் அஜித் பேசிய பேச்சில் இருந்து புரிகிறது.

எந்த பிரச்சினையென்றாலும் முதலில் சினிமாகாரர்கள் சாலையில் இறங்கி போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களில் பங்கேற்க முடியாத கலைஞர்களை தமிழ் தூரேகி என்று முத்திரை குத்துகிறார்கள் என முதல்வர் இருக்கும் மேடையிலேயே துணிச்சலுடன் முழங்கி விட்டார் அஜித்.

அவர் பேச்சுக்கு முன்னணி சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் உட்பட பலரும் கை தட்டியது, அஜித் பேச்சில் உண்மை இருப்பதை .உணர்த்தியுள்ளது.

அஜித்தின் இந்தப் பேச்சுக்கு, சினிமா வட்டாரத்திலேயே சிலருக்கு அதிருப்தி ஏற்படுத்தியிருப்பது வேறு கதை அதே நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், சினிமாவையும், அரசியலையும் கலக்கக் கூடது எனக் கூறியுள்ளார். அவரின் இந்தக் கருத்து பாராட்டுக்குரியது.

தனது இந்தக் கருத்தில் முதல்வர் உறுதியாக இருந்தால் சிலவற்றை செய்ய வேண்டும்;


(1)  சினிமா காரர்கள் நடத்தும் சம்பிரதாயமான பாராட்டு விழாக்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது.

(2) தேசிய பிரச்சனைகளுக்கு சினிமா காரர்கள் போராடுவதை ஊக்குவிக்கக் கூடாது.

(3) அரசியல் பிரசாரங்களின் போது சினிமா காரர்களின் தயவு தேவை என்பதால், அவர்களுக்கு நியாயமற்ற விசேஷ சலுகைகளை அளிக்க கூடாது.

சினிமா காரர்களிக்கு ஓர் வார்த்தை;  யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால், எல்லாம் செளக்கியமே... உங்கள் பணியை மட்டும் பாருங்களேன்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Wednesday, 10 March 2010 19:44 )  


More and More


கிட்டதட்ட

05 February 2012, 18.16 செய்திகள்
விஜயகாந்த் இடைக்கால பதவிநீக்கம் : கருணாநிதி கண்டனம்
சென்னை: சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இடைக்கால...மேலும்...
0 Comments , 163 Hits
29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 60 Hits
28 April 2012, 12.55 செய்திகள்
புதுக்கோட்டை இடைத்தேர்தல் : திமுக நிலைப்பாடு குறித்து மே 17 அறிவிப்பு - கருணாநிதி
சென்னை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மே 17ம்...மேலும்...
0 Comments , 32 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits