maniyosai.com

You are here: Home செய்திகள் தலையங்கம் எங்கேயும் எப்போதும்...அரசியல்?!?

எங்கேயும் எப்போதும்...அரசியல்?!?

E-mail Print
Share/Save/Bookmark

koodankulam nuclear plantகூடங்குளத்தில் அணுமின்நிலையம் அமைப்பது தொடர்பாக இப்பொழுது தமிழ்நாட்டில் பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தென்மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள்,வியாபாரிகள்,சமூக சேவகர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து ஃபுகுஷிமா அணுமின்நிலையத்தில் ஏற்பட்ட விபத்துதான் மக்களின் இந்த அச்சத்துக்கு காரணம்.

இந்தியாவை பொருத்த வரை 19 அணுமின்நிலையங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. தமிழகத்தில் கல்பாக்கத்தில் ஏற்கனவே அணுமின்நிலையம் உள்ளது. இந்த அணுமின்நிலையங்களில் இது வரை எந்த பெரிய அசம்பாவித நிகழ்வுகளும் நடந்ததில்லை.

கூடங்குளம் அணுமின்நிலையம் அமைக்கும் திட்டம் திடீரென ஓரிரவில் உருவானது அல்ல. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் கையெழுத்தான ஒப்பந்தத்தை தொடர்ந்து 1988ம் ஆண்டே இந்த அணுமின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டன. இந்த கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கப் பட்டால் தமிழகத்தின் மின்பற்றாக்குறை நிலை கணிசமாக குறையும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்தகைய திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, மக்களின் பாதுகாப்பைப் பற்றி ஆராய்ந்திருக்காதா என்பதை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

அப்படியிருக்க இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது வியப்பளிக்கிறது. புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசையும், மத்திய அரசையும் நிலை குலைய செய்ய வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த ஆர்ப்பாட்டங்களை சில அரசியல் கட்சிகள் தூண்டி வருவது கண்டிக்கத் தக்கதாகும்.

தமிழகத்தின் வளர்ச்சியை, எதிர்காலத்தை விரும்பாத விஷமிகளே தன் சுய ஆதாயத்திற்காக தங்களை தூண்டி போராட்டத்தில் ஈடுபட வைத்து குளிர்காய்ந்து வருகின்றனர் என்பதனை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அப்பாவி பொதுமக்கள் உணர வேண்டும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

05 February 2012, 12.49 செய்திகள்
பிடிவாதம் பிடித்தால் பிடி வாரண்ட் : சிதம்பரம் பேச்சு
பாளையங்கோட்டை : கூடங்குளம் அணு மின்நிலையம் அமைக்கும் விவகாரத்தில்...மேலும்...
0 Comments , 108 Hits
19 March 2012, 17.47 தலைப்புச் செய்திகள்
கூடங்குளம் அணுமின்நிலையம் திறக்க தமிழக அரசு அனுமதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்தை திறக்க தமிழக அரசு...மேலும்...
0 Comments , 54 Hits
31 March 2012, 18.13 செய்திகள்
மின் கட்டண உயர்வு : கருணாநிதி கண்டனம்
சென்னை: மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருப்பதற்கு திமுக...மேலும்...
0 Comments , 122 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits