கோழிக்கோடு: பி டி கத்திரிக்காய்க்கு மத்திய அரசு தடை செய்திருப்பதை சுற்று சூழல் ஆர்வலர்கள் வரவேற்றிருக்கிறார்கள். பிரபல சுற்று சூழல் ஆர்வலரான வந்தனா சிவா பி டி கத்திரிக்காயினால் வருங்காலத் தலைமுறையினர் மிகவும் பாதிப்படைவர் என்றுக் கூறியிருக்கிறார்.
பி டி கத்திரிக்காயில் இருக்கும் சில கூறுகள் வருங்காலத்தினருக்கு கடுமையான நோய்களை ஏற்படுத்தக் கூடியது. சில பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்தைப் பரப்புவது பல கொடுமையான நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது.
அவர் மேலும் கூறியதாவது இந்திய அரசு மாநகரங்களில் இருக்கும் உணவுப் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளை நகர்புறங்களிலும் தொடங்குவதன் மூலம் நோயற்ற எதிர்கால இந்தியாவை உருவாக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
Want to write for Maniyosai?
Download our android app


