கோவை: கோவையில் இன்று (ஜூன் 23) தொடங்கிய உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் ஃபின்லாந்து நாட்டை சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலாவிற்கு “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கப்பட்டது.
விருதினைப் பெற்று ஏற்புரை ஆற்றிய பேராசிரியர் அஸ்கோ பர்போலா, தமிழ் மொழி உலகிற்கு பல மறக்கவொண்ணா செம்மையான இலக்கியங்களை தந்திருக்கிறது என்று குறிப்பிட்டார்.
மேலும் 3000 ஆண்டுகள் பழமையான சம்ஸ்கிருதத்தைக் காட்டிலும் பழமையான சிந்துவெளி நாகரீக எழுத்துக்கள் திராவிட வடிவமே,,ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் நாகரீகமும் திராவிட நாகரீகமே என்றும், உலகின் பழமையான மொழிகளுள் தமிழ் சிறப்புடையதாகும் என்று கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app





