பெர்காம்பூர்: ஒரிஸாவின் தென் மேற்கு மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கு காரணமாக 85,000 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஒரிஸாவின் தென் மேற்கு மாவட்டங்களான நபரங்பூர், காலஹந்தி மற்றும் கோராபுத் மாவட்டங்களில் பெய்த கன மழையை தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தப் பகுதியில் இருக்கும் 151 கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றன.
இந்தக் கிராமங்களில் வாழும் 85,000 மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அம்மாநில அரசு அப்புறப் படுத்தியுள்ளது. அவர்களுக்கு சமுதாய நலக் கூடங்கள் மூலமாக உணவு தயாரிக்கப் பட்டு வழங்கப் பட்டு வருகிறது.
வெள்ளத்தில் சேதமடைந்த பகுதிகளை நேற்று (ஆக.8) பார்வையிட்ட மாநில வருவாய் மற்றும் இயற்கை பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் பேட்ரோ, நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும், வெள்ளத்தில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு, மாநில அரசின் விதிமுறைகளின் படி நிவாரணத் தொகை வழங்கப் படும் என பேட்ரோ தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app





