ஹர்தா (மபி): மாட்டின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பதைக் கண்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரே அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
மாட்டின் உடல்நிலை நேற்று (ஜூன் 28) மிகவும் மோசம் அடைந்தது. அதனையடுத்து மாட்டின் உரிமையாளர், உடனடியாக அருகில் இருக்கும் பிராணிகள் மருத்துவமனைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக, பிராணிகள் மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணி புரியும் ராகேஷ் பஸ்தாரியாவின் வீட்டுக்கு விரைந்தார்.
அவர் வீட்டிலேயே மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. 3 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையில், மாட்டின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் வெளியே எடுக்கப் பட்டது.
இது பற்றி மருத்துவர் ராகேஷ் பஸ்தாரியா கூறுகையில்,“மாட்டின் வயிற்றில் இவ்வளவு எடைக்கு பிளாஸ்டிக் பைகள் இருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தற்போது மாடு நலமாக உள்ளது.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app


