கோவை: கோவையில் நடந்து வரும் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்ற ஜெர்மானிய பல்கலைக்கழகத்தின் தமிழ் பேராசிரியை உல்ரிக் நிக்லஸ் (ஜூன் 24) தனக்கு கல்கியில் நூல்களை பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.
உல்ரிக் நிக்லஸ் அளித்த பேட்டி:
ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் போன்ற சங்ககால இலக்கியங்களை படித்துள்ளேன். அதிலுள்ள வரிகள் அதற்குரிய அர்த்தங்களை படித்தால் நான் ஏன் தமிழச்சியாக பிறக்கவில்லை என்ற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றுகிறது.
அதனால்தான் நான் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், பாண்டிசேரியை சேர்ந்தவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளேன். ஜெர்மன் எனக்கு பிறந்த வீடு என்றால்,தமிழகம் எனக்கு புகுந்த வீடு.
5 ஆண்டுகளாக நான் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழ் பாரம்பரியம் மிக்க தொன்மையான மொழி. தொல்காப்பியம், திருவாசகம், தேவாரம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை செய்துள்ளேன். கல்கி எழுதிய பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகிய நூல்களை நான் படித்துள்ளேன்.
மிக சிறு வயதிலேயே சிவாஜி கணேசன் படங்களை ஒன்று விடாமல் பார்ப்பேன். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தை நான் பல முறை பார்த்துள்ளேன். அதன் வசனங்கள் எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு உல்ரிக் நிக்லஸ் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app





