
மதுரா: மதுரா அருகே நேற்றிரவு சரக்கு ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கும் தில்லிக்கும் இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.
இதனால் பத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் அட்டவணை நேரத்தை விட தாமதமாக
புறப்பட்டுள்ளன.
நேற்றிரவு (பிப்.11) 9 மணியளவில் பெட்ரோலிய பொருட்களை ஏற்றிக் கொண்டு ராஜஸ்தானில் இருந்து, தில்லி சென்றுக் கொண்டிருந்த சரக்கு ரயில்
மதுரா அருகே எதிர்பாராத விதமாக தட்டம் புரண்டுள்ளது.
ரயில்வே ஊழியர்கள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து கவிழ்ந்த சரக்கு ரயிலை அப்புறப் படுத்தும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app



