maniyosai.com

You are here: Home செய்திகள் குஜராத்தில் மகிழ்ச்சியில் திளைக்கும் முஸ்லிம்கள்: அரசின் முழு பக்க விளம்பரத்தால் சர்ச்சை

குஜராத்தில் மகிழ்ச்சியில் திளைக்கும் முஸ்லிம்கள்: அரசின் முழு பக்க விளம்பரத்தால் சர்ச்சை

E-mail Print
Share/Save/Bookmark

narendra modiபாட்நா: குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக, பிகார் மாநிலத்தின் பிரபல நாளிதழ்களில், குஜராத் அரசு வெளியிட்டிருக்கும் முழு பக்க வண்ண விளம்பரம் எதிர்கட்சிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிதிஷ் குமார் அரசு அமைந்து 4.5 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பிகார் மாநிலத்திற்கு விஜயம் செய்ய உள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

அவர் நாளை (ஜூன் 12) பாஜக தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். ஜூன் 13ம் தேதி பேரணி ஒன்றில் பங்கேற்க உள்ளார் நரேந்திர மோடி.

இந்நிலையில், குஜராத்தில் முஸ்லிம்கள் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக, பிகார் மாநிலத்தில் வெளியாகும் இந்தி, ஆங்கிலம், உருது நாளிதழ்களில், ஒரு முழு பக்க விளம்பரத்தை இன்று (ஜூன் 11) வெளியிட்டுள்ளது குஜராத் அரசு. அதில், குஜராத்தில் முஸ்லிம்கல் வாழ்க்கை தரம் பற்றிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புள்ளி விவரங்கள் சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அளிக்கப் பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

இது குறித்து ராஷ்டிரிய ஜனதா தள பிகார் மாநில தலைவர் அப்துல் பாரி சித்திக்கி கூறுகையில், “குஜராத் அரசின் முழு பக்க விளம்பரம், 2002ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான குஜராத் கலவரத்தை எங்களுக்கு நினைவு படுத்துகிறது.” எனக் கூறியுள்ளார்.

குஜராத் அரசின் முழு பக்க விளம்பரம் குறித்து காங். தலைவர்கள் அசோக் ராம் மற்றும் ராம்ஜத்தன் சின்ஹா கூறுகையில்,”மக்களை திசை திருப்பம் மோடி முயல்கிறார். நரேந்திர மோடியின் உண்மையான முகம் மக்களுக்கு தெரியும்.” என்றார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 11 June 2010 19:06 )  


More and More


கிட்டதட்ட

14 May 2012, 19.04 செய்திகள்
பாஜகவில் இருந்து விலகும் எண்ணம் இல்லை : எடியூரப்பா
பெங்களூரு: பாஜகவில் இருந்து விலகும் எண்ணமில்லை என்றும் 70 சட்டமன்ற...மேலும்...
0 Comments , 19 Hits
08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
19 January 2012, 20.47 செய்திகள்
காங்கிரஸை தோற்கடித்தால்தான் நாடு உருப்படும் : நிதின் கத்காரி
மெகபூப்நகர்: காங்கிரஸ் கட்சியை தேர்தலில் தோற்கடித்தால்தான் நாடு...மேலும்...
0 Comments , 87 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits