உதகை: நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஆண்டு பெய்த மழையில் சின்னாபின்னமாகி தற்போது மீண்டு இருக்கும் ஊட்டியில் தற்போது மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, கேரள எல்லையில் இருக்கும் தமிழக பகுதிகளான நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய காய்கறிகள் ஆங்காங்கே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கன மழையால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 14) விடுமுறை அளிக்கப்பட்டது.
Want to write for Maniyosai?
Download our android app





