திட்டக்குடி: முன்பு கலைஞர் தெரிவித்த கருத்தைதான் தற்போது தானும் தெரிவிப்பதாக மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
திட்டக்குடியில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
’’எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது இலவச காலணி, இலவச பல்பொடி என்ற சில திட்டங்களை செயல் படுத்தினார்.
1989-ல் தமிழ்நாட்டில் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, 'இலவசங்கள் என்பது தற்காலிகமாகத்தான் இருக்க முடியும். அது நீடித்தால் சமுதாயத்துக்கு தீங்குதான் ஏற்படும். உண்மையான முன்னேற்றம் என்பது மக்கள் தாங்களுக்கு தாங்களே தேவையானவற்றை வாங்கி கொள்ளக்கூடிய முறையில் வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்வதுதான்' என கூறினார். இதனையே நான் கூறினால் கலைஞருக்கு கோபம் வருகிறது. அவர் 1989-ல் சொன்னதைத்தானே தற்போது நான் திருப்பி சொல்கிறேன்.
இலவச பொருட்கள் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இலவச கழிவறை கட்டி தர வேண்டும்."
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app



