maniyosai.com

You are here: Home செய்திகள் சம்பவம் விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது

விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது

E-mail Print
Share/Save/Bookmark

IAFபுனே: விமானப்படைக்கு சொந்தமான  சுக்ஹோய் -30 எம்கேஐ  ரக போர் விமானம் ஒன்று இன்று (டிச.13) விழுந்து நொறுங்கியது .இதில் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்த இரண்டு விமானிகளும் உயிர் தப்பினர்.



சுக்ஹோய் -30 எம்கேஜே என்பது இந்திய விமானப்படையின் போர் விமானம் ஆகும். அது இன்று மதியம் 12.45 மணிக்கு (டிச.13) வழக்கமான சுற்றாக லோஹேகான் விமானநிலையத்திலிருந்து மேலே எழும்பி பறக்கத் தொடங்கியபோது 01.15  மணிக்கு எதிர்பாராதபடி விழுந்து நொறுங்கியது. அதிருஷ்டவசமாக விமானத்திலிருந்த விமான ஓட்டிகள் இருவரும் வெளியே தள்ளப்பட்டு பத்திரமாக தரையிறங்கினர்.

 

புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்தது, கட்டுப்பாட்டு அறையின் தொடர்பையும் இழந்தது. ஆனால் விமான ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்திலிருந்து வெளியே குதித்தனர்.

இது தொடர்பாக புனே மாவட்ட ஆட்சியாளர் விகாஸ் தேஷ்முக் கூறுகையில் விமானம் காட்டுப்பகுதியில் மோதி விழுந்தவுடன் தீப்பற்றி எரிந்தது என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் முதன்முதலில் அறிமுகமாகிய சு-30  ரக விமானம் விழுந்து நொறுங்கும் சம்பவம் இந்தியாவில் மூன்றாவது முறையாக நிகழ்கிறது. இந்தவகை விமானம் 1997-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் அறிமுகமாகியது.

இன்றைய விபத்து இந்த ஆண்டில் நிகழும் எட்டாவது விமானப்படை விமான விபத்தாகும்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 13 December 2011 19:57 )  


More and More


இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%