மால்டா (மே.வ.): மேற்குவங்க மாநிலத்தின் மால்டா நகரில் அமைந்துள்ள மால்டா சாதர் அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களில் 9 குழந்தைகள் இறந்துள்ளன.
மேற்குவங்க மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் இறப்பது தொடர்கதையாகி விட்டது.
கோல்கத்தா அரசு மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் சரியான சிகிச்சை கிடைக்காமல் ஆறு நாட்களில் 15 குழந்தைகள் இறந்தன.
அப்போது மருத்துவமனைக்கு தேவையான நவீன உபகரணங்களை வாங்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் 9 குழந்தைகள் இறந்துள்ளன. இந்தக் குழந்தைகள் அனைத்தும் மூச்சு கோளாறு காரணமாக இறந்துள்ளதாக தெரிகிறது.
இத்தனை உயிரிழப்புகளுக்கு பிறகும் குழந்தைகள் மருத்துவமனைகளை மேம்படுத்துவதில் அம்மாநில அரசு மெத்தனம் காட்டி வருவது மேற்குவங்க மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app

