சென்னை: கீழ்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் கிளையில் இன்று (பிப்.20) மதியம் துப்பாக்கி முனையில் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் அண்மை காலமாக கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன் பெருங்குடியிலுள்ள பாங்க் ஆஃப் பரோடா கிளையில் கொள்ளை அடிக்கப் பட்டது.
அந்த கொள்ளை சம்பவத்துக்கு காரணமானவர்கள் யாரென்று இது வரை தெரியவில்லை.
இந்நிலையில், கீழ்கட்டளை ஐஓபி வங்கி கிளையில் இன்று (பிப்.20) மதியம் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று காரில் வந்து இறங்கி, துப்பாக்கி முனையில் கொள்ளை அடித்து சென்றுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் வாகன சோதனையும் நடந்து வருகிறது.
கொள்ளை அடிக்கப் பட்ட பணம் எவ்வளவு என்பது இது வரை தெரியவில்லை.
Want to write for Maniyosai?
Download our android app

