maniyosai.com

You are here: Home செய்திகள் சம்பவம் பட்டக் காலில் படும்: மேற்கு வங்கத்தில் கள்ளச் சாராயம் பருகி 35 பேர் சாவு

பட்டக் காலில் படும்: மேற்கு வங்கத்தில் கள்ளச் சாராயம் பருகி 35 பேர் சாவு

E-mail Print
Share/Save/Bookmark

கோல்கத்தா: ஆம்ரி மருத்துவமனையில் தீ விபத்து நிகழ்வு நடந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் மற்றொரு விபரீதம் நடந்துள்ளது. கள்ளச் சாராயம் குடித்ததில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்; 100 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த கொடிய நிகழ்வு மொக்ரகாத் ஊரில் நடந்துள்ளது. இந்த நிகழ்வை தொடர்ந்து ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் சாராயம் காய்ச்சப் படும் குடில்களை அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி., லட்சுமி நாராயண் மீனாவிடம் நிருபர்கள் கேட்ட போது கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 100 பேர் வயிற்று வலி, வாந்தி, பேதி ஏற்பட்டதையடுத்து டைமண்ட் ஹார்பர், சங்ராம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%