கொழும்பு: இலங்கை சுதந்திரமான நாடு அதன் அரசியல் விவகாரங்களில் தனக்கென சிலக் கொள்கைகளை வைத்துள்ளது. இதில் எந்த நாடும் தலையிட முடியாது என இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பெரிஸ் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்திருந்தார். இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்தவர் இந்தியாவுக்கு வருவதா என பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் வழக்கம்போல எதையும் பொருட்படுத்தாத மத்திய அரசு ராஜபக்சேவுக்கு சிறந்த வரவேற்பு அளித்தது. இலங்கை தமிழர்களுக்காகப் போராடி வருவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக முதல்வர் கருணாநிதியும் தான் நேரில் செல்லாமல் தனது எம் பிக் களை அனுப்பி மனு ஒன்றுக் கொடுத்தார். அப்பொழுது ஈழத் தமிழர்கள் மறுவாழ்வுக் குறித்து மிகத் தீவிரமாக பேச்சுவார்த்தை நடைப்பெற்றதாக இந்திய தரப்பிலிருந்து கூறப்பட்டது.
இந்நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி. எல். பெரிஸ் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா எந்தவித நெருக்கடியும் தரவில்லை. இருநாடுகளின் உறவும் திருப்திகரமாகவே இருக்கிறது எனக் கூறியுள்ளார். தமிழக எம் பிக்கள் சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டதறகு "ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தீர்வு காணும் அரசியல் சாசன சட்டத் திருத்தம் குறித்து அப்போது பேசப்பட்டது'' எனத் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா ரூ.4700 கோடி இலங்கைக்கு கடன் தர முன்வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app





