maniyosai.com

You are here: Home செய்திகள் முதல்வரின் கோபாலபுரம் வீட்டில் விதிமீறல்? - ஜெ.ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

முதல்வரின் கோபாலபுரம் வீட்டில் விதிமீறல்? - ஜெ.ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

jayalalithaசென்னை: முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் கட்டட விதிமீறல் நடந்திருப்பதாக ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதனைக் கண்டித்து நாளை (ஆக.28) சென்னையில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா இன்று  (ஆக.27) வெளியிட்டுள்ள அறிக்கை:
1967-ம் ஆண்டு தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு, கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு பின்புறம் இருந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 780 சதுர அடி நிலத்தை தன் வீட்டுடன் கருணாநிதி இணைத்து கொண்டார். சென்னை மாநகராட்சி விதிமுறைகளின்படி, 10,000 சதுர அடிக்கு மேலான கட்டடம் கட்டப்படும் போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட காலி இடத்தை மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், தி.மு.க. தலைமையிடமான அண்ணா அறிவாலயம் கட்டப்படும் போது, மாநகராட்சி விதிமுறைப்படி காலியிடம் மாநகராட்சியிடம் வழங்கப்படவில்லை.

இவற்றைக் கண்டித்து வடசென்னை மாவட்ட அதிமுக சார்பில், 28.8.2010 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

30 December 2011, 18.11 செய்திகள்
சசிகலா நீக்கப் பட்டதற்கு பாராட்டு: அதிமுக செயற்குழு தீர்மானம்
சென்னை: கட்சியின் நலனுக்காக அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்...மேலும்...
0 Comments , 157 Hits
29 February 2012, 19.33 செய்திகள்
கூடங்குளம் குறித்த தனது நிலையை தமிழக அரசு தெளிவுப் படுத்த வேண்டும் : கருணாநிதி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக நடந்து வரும்...மேலும்...
0 Comments , 60 Hits
10 April 2012, 18.22 செய்திகள்
கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கைது
விருதுநகர்: கொலையாளியை தப்ப வைக்க சாட்சியங்களை மறைத்ததாகக் கூறி...மேலும்...
0 Comments , 41 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits