புதுதில்லி: கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து நீக்கப் பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
பாக்கிஸ்தானின் தந்தை என வர்ணிக்கப் படும் முகமது அலி ஜின்னாவை பாராட்டி ஜஸ்வந்த் சிங் புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த விவகாரம் அக்கட்சி வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், சிம்லாவில் நடந்த கட்சி கூட்டத்தில் ஜஸ்வந்த் சிங் கட்சியில் இருந்து நீக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.
சமீபத்தில், பாஜக தன்னுடைய ரத்தத்தில் ஊறி இருப்பதாகவும், பாஜகவை தான் இழந்து விட்டதாகவும் ஜஸ்வந்த் சிங் வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜூன் 24) பாஜக தலைவர் நிதின் கட்காரி, கட்சி மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் முன்னிலையில் ஜஸ்வந்த் சிங் மீண்டும் பாஜகவில் இணைந்தார்.
பாஜக ஆட்சியில், ஜஸ்வந்த் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app




